வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (18:04 IST)

பிரபல நடிகர் காலமானார்… சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி

மலையாள திரை உலகத்தில் முக மூத்த கலைஞர் பாப்பு குட்டி பாகவதர். இவர் பிரபல பாடகர் கே.ஜே. ஜேசுதாசின் அப்பாவுடன் இணைந்து நாடகங்கள் நடித்தார்.

பின்னர் கடந்த 1958 ஆம் ஆண்டு வெளியான பிரசன்னா என்ற படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார்.   அப்போது முதல் 2013 ஆம் ஆண்டு வரை நீண்டகாலமாக நடித்து வந்தார்.

கொச்சி அருகே உள்ள பல்லுக்குட்டி என்ற கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், தற்போது 107 வயதான நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் காலமானார்.

இவரது மகன் பிரபல நடிகர் மோகன் ஜோஸ் என்பது குறிப்பிடத்தக்கது