ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (19:05 IST)

காதல் மனைவிக்கு கள்ளத்தொடர்பு - பிரபல நடிகர் புகார்

karan nisha
இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் கரண் மெஹ்ரா. இவர் தொலைக்காட்சி நடிகை நிஷா ராவலை சுமார் 6 ஆண்டுகள் காதலித்து,2012 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.

இந்த  நட்சத்திர தம்பதிக்கு 2017 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தன் வங்கிக் கணக்கில் இருந்து, ரூ.1 கோடியை கரண் எடுத்துவிட்டதாக, போலீஸில் நிஷா புகாரளித்தார்,, எனவே கரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தன்னை கரண் அடித்தார் என   நிஷா அளித்த புகாரின் அடிப்படையில், கரண் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்,கரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: நிஷாவுக்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.  அதை அவரே என்னிடம் கூறினார். அவர் தற்போது எங்கள் வீட்டில் வசித்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.