வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (23:45 IST)

பிரபல நடிகர் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு… சேரன் அதிர்ச்சி

இன்று காலையில் பிரபல நடிகர் இளவரசுக்கு (களவாணி படத்தில் விமலுக்கு அப்பாவாக நடித்தவர்)பிறந்த நாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அதில் இயக்குநர் சேரனும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்நிலையில் சேரன் தனது டுவிட்டர் பதிவில், நண்பரே... நான் திரு இளவரசு அவர்களிடம் விசாரித்ததில் இந்த டுவிட்டர் கணக்கு அவருடையது அல்ல என தெரிவித்தார்.. ஆகவே தயவுகூர்ந்து அவர் அனுமதியின்றி அவர் பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இந்த அக்கவுண்டை உடனடியாக நீக்கவும்...என தெரிவித்துள்ளார்.