1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (18:26 IST)

ஹீரோவாகும் தனுஷ் பட வில்லன்: டைட்டில் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

paramporul
தனுஷ் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் தற்போது ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் அமிதாஷ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் வானம் கொட்டட்டும் உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது பரம்பொருள் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் 
 
இந்த படத்தில் காஸ்மீரா என்பவர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் இயக்குனராக அரவிந்தராஜ் என்பது என்பதும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது