செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (13:23 IST)

தனுஷுக்காக எழுதிய பாத்திரத்தில் நான் நடித்தேன்… ஃபஹத் பாசில் சொன்ன சீக்ரெட்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பஹத் பாசில் தற்போது பேன் இந்தியா நடிகராகியுள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.

அடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘மலையன் குஞ்சு’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தொடர்ந்து ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் எனக் கலக்கி வரும் அவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்காணலில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘கும்பலாங்கி நைட்ஸ் திரைப்படத்தின் ஷம்மி கபூர் பாத்திரத்தை தனுஷுக்காக தான் எழுதி இருந்தார்கள். ஆனால் பட்ஜெட் காரணமாக அதை அவரிடம் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் நானே நடித்தேன்’ எனக் கூறியுள்ளார்.

கும்பலாங்கி நைட்ஸ் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஃபஹத் நடித்திருந்த ஷம்மி கபூர் பாத்திரம் ஒரு சைக்கோ தனமான வில்லன் பாத்திரம். படம் வெளியான போது பலரும் பஹத்தின் நடிப்பை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.