உதயநிதி & மாரி செல்வராஜின் படத்தில் இணையும் பஹத் பாசில்?
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது உதயநிதி ஸ்டாலின்தான் என்பது உறுதியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார். ஆனால் இப்போது இந்த படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.
அதற்குக் காரணம் மாரி செல்வராஜ் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலினை இயக்க முடிவு செய்ததுதானாம். இந்த ஆண்டு இறுதியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பஹத் பாசிலிடம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது அதிக அளவில் தமிழ் சினிமாக்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார் பஹத் பாசில்.