வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (07:57 IST)

பஹத் பாசிலின் ஆவேஷம் ரீமேக்கில் நடிக்கிறாரா பாலைய்யா..!

கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அப்படி கடந்த மாதம் ரிலீஸான பஹத் பாசில் நடித்த ஆவேஷம் என்ற திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. வெளியாகி இரண்டாவது வாரத்தில் இந்த படம் திரையரங்குகள் மூலமாக 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அதில் பஹத் பாசில் நடித்த கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.