தொடர்புடைய செய்திகள்
- “அவனுக்கு நான் அக்கா கிடையாது, அம்மா” – நகுல் குறித்து எமோஷனலாக பேசிய தேவயானி.
- கவினின் படத்தின் ஷூட்டிங் நிறுத்தத்துக்கு அனிருத்தான் காரணமா?
- பிக்பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் Gen Z தலைமுறை திரைப்படம்"பன் பட்டர் ஜாம்"!
- எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!
- செங்கோட்டை தாக்குதல் குற்றவாளியின் கருணை மனு நிராகரிப்பு.. தூக்கு உறுதி..!
மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் சேரன்!
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை.
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதையடுத்து அவர் இப்போது ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கி வெளியிட்டார். இதன் பின்னர் அவர் கிச்சா சுதீப் நடிக்கும் ஒரு தமிழ் கன்னடப் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அதன் பின்னர் அதுபற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்போது சேரன் மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். டோவினோ தாமஸ் நடிக்கும் நரி வேட்டா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
