1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (16:39 IST)

இது படம் அல்ல நிஜம்; இயக்குநரை மாட்டிவிட்ட ரன்வீர், தீபிகா

பத்மாவதி படத்தில் நடித்து வரும் ரன்வீர், தீபிகா நெருக்கமாக முத்தம் கொடுக்கும் புகைப்படம் அண்மையில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனால் இயக்குநர் பன்சாலி அவர்கள் இருவர் மீதும் கடும் கோபத்தில் உள்ளாராம். 


 

 
சஞ்சய் லீலா பன்சாலி பத்மாவதி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ரன்வீர் சிங் மற்றும் திபீகா படுகோன் ஆகியோர் நடிக்கின்றனர். இவரும் காதலித்து வந்தது எல்லோரும் அறிந்த ஒன்று. பன்சாலி இருவரையும் சேர்ந்து ஊர் சுற்றக்கூடாது என கட்டளையிட்டுள்ளார்.
 
சில நாடகளுக்கு முன் படத்தின் படப்பிடிப்பின் போது பத்மாவதியை அசிங்கப்படுத்துவதாக கூறி இயக்குநர் பன்சாலி தாக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. இதையடுத்து இயக்குநர் பன்சாலி, அலாவுதீன் கில்ஜியாக நடிக்கும் ரன்வீர் சிங்-க்கும் பத்மாவதியாக நடிக்கும் தீபிகாவுக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் இல்லை என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் தீபிகாவும், ரன்வீரும் சேர்ந்து செய்த வேலையால் மீண்டும் பன்சாலி ஆத்திரத்தில் உள்ளார். ரன்வீர் சிங், தீபிகா இருவரும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவியது. இதனால் பன்சாலி இவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளாராம். இவர்களால் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் மிக கவணமாக உள்ளார் இயக்குநர் பன்சாலி.