1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (17:57 IST)

சனாதன தர்மத்தை நாங்கள் நம்புகிறோம்.. குணசேகரனின் அப்பத்தா ஆவேச பேட்டி..!

சனாதன தர்மத்தை நாங்கள் நம்புகிறோம் என்றும் தப்பான செய்தியை வெளியிட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம் என்றும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் அப்பத்தாவாக நடித்த  பாம்பே ஞானம் இன்று  ஊடகத்தில் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்
 
 யூட்யூப் சேனல்களில்  மாரிமுத்து மரணம் என நான்கு நாட்களுக்கு முன்பே வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.  ஏன் இப்படி செய்கிறார்கள்?  ஒவ்வொருத்தருடைய செண்டிமெண்ட், எமோஷனலை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தால் அது ரொம்ப தப்பு.  
 
என்றைக்காவது ஒரு வார்த்தை  ஏதாவது ஒரு இடத்தில் பலிக்கும். அதெல்லாம் நாங்கள் நம்புகிறோம். சனாதன தர்மத்தில் இதெல்லாம் இருக்கிறது. அதை நாங்கள் நம்புகிறோம்.  
 
ஒருத்தரை சாவடித்து தப்பான பொய்ச்செய்தி கிளப்பி விட்டு பணம் சம்பாதித்தால் அது உங்களுக்கு உருப்படுமா? தயவு செய்து அதை பண்ணாதீர்கள், நல்ல விஷயத்தை மட்டும் செய்தியாக போடுங்கள் என்று தெரிவித்தார்.  அவரது இந்த பேட்டி ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran