செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:25 IST)

குழந்தையின் சிகிச்சைக்காக ரூ.20 லட்சம் அளித்த விஜய்சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குழந்தை ஒன்றின் சிகிச்சைக்காக ரூபாய் 20 லட்சம் தந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
குமாரபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற சிறுமிக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் வந்துள்ளது. இந்த நோயை குணப்படுத்த ரூபாய் 16 கோடி ஊசி ஒன்று போட வேண்டும் என்பதால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் நிதி திரட்டி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூபாய் 20 லட்சம் நிதி அளித்து உள்ளார். இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர் 
 
மேலும் விஜய் சேதுபதியை போல் மற்ற நடிகர்களும் பொதுமக்களும் தங்கள் குழந்தையின் சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த குழந்தைகள் சிகிச்சைக்காக பலர் முன்வந்து நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.