1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (16:30 IST)

வலிமையோடு மோதும் எதற்கும் துணிந்தவன்… கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப் போகிறது. தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது. அடுத்த மாதம் டிசம்பரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் வலிமையோடு மற்றொரு திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் படமும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பாண்டிராஜ் இயக்கத்தில் குடும்ப பாசம் கொண்ட ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிறது.