வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (09:38 IST)

ஈரம் அறிவழகன் இயக்கும் சப்தம் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையில் அவர் அருண் விஜய் நடிப்பில் இயக்கிய பார்டர் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவழகன் மீண்டும் ஆதி நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படமும் ஒரு த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு சப்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை லைலா ஒப்பந்தம் ஆகியுள்ளார். லைலா சமீபத்தில் கார்த்தியின் சர்தார் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.