செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:41 IST)

ஓடிடியில் வெளியாகும் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார்! – ட்ரெய்லர் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் “துக்ளக் தர்பார்”. இந்த படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவி பெற்றுள்ள நிலையில், ஓடிடி வெளியிட்டை நெட்ப்ளிக்ஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்டு 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.