ராணா தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’.. மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியால் துல்கர் சல்மானுக்கு அனைத்து மொழிகளிலும் மார்க்கெட் உருவாகியுள்ளது.
இதனால் அவர் இப்போது நடிக்கும் படங்கள் எல்லாம் பன்மொழி படங்களாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் நடிப்பில் லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இப்போது ராணா தயாரிப்பில் அடுத்து காந்தா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் செல்வமணி செல்வராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.