1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (07:18 IST)

சூர்யாவுக்கு வில்லன் ஆகிறாரா துல்கர் சல்மான்… சமூகவலைதளங்களில் பரவும் தகவல்!

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.