திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (10:30 IST)

மூன்றாவது முறையாக இயக்குனருடன் கைகோர்க்கும் நானி – பர்ஸ்ட் லுக் வெளியீடு!

நானி மற்றும் இயக்குனர் சிவா நிர்வானா கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் டக் ஜெகதீஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் நானி மற்றும் இயக்குனர் சிவா நிர்வாணா கூட்டணியில் வெளியான நின்னு கோரி மற்றும் மஜிலி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்த படங்கள் எல்லாம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளன. இந்நிலையில் இந்த வெற்றிக் கூட்டணி இப்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்துக்கு டக் ஜெகநாத் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மேலும் இந்த படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.