1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 21 அக்டோபர் 2021 (20:08 IST)

போதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகையிடன் விசாரணை

தேசிய போதைத் தடுப்புப் பிரிவினர்  பாலிவுட் நடிகை  அனன்யா பாண்டியாவின்  செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ளனர்.

 கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் மறைவுக்கு பின்னர் பாலிவுட் சினிமாவில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர்களுக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து சமீபத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை அனன்யா  பாண்டியாஸ் ரேவ் பார்ட்டியில் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பாக அவரது செல்போன் லேப்டாப்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றி அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.