: சூப்பர் ஸ்டார் மகனுக்கு ஆஜராக வக்கீல் பீஸ் இவ்வளவா??
பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகன் ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், அவருக்காக வாதாடும் வக்கீல் பீஸ் குறித்த தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 13 பேர்களில் ஒருவராக கைதாகியுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கானை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.
அக்டோபர் 1 வரை அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, போதைப்பொருள் பயன்பாடு விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரை அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஆஜாராக இந்தியாவில் பிரபல வக்கீல் சதீஷ் மானேஷிண்டே நியமிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் பிரபலங்களுக்காக வாதாடி புகழ்பெற்ற இவர் ஒருமுறை ஆஜராவதற்கு ரூ.10 லட்சம் கட்டணம் பெறுவதாகத் தகவல் வெளியாகிறது. இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.