‘நீங்க தான் ஹோம் மினிஸ்டர்’: தி கிரேட் இந்தியன் கிட்சன்’ டிரைலர்
நீங்க தான் ஹோம் மினிஸ்டர்: தி கிரேட் இந்தியன் கிட்சன் டிரைலர்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிட்சன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட இரண்டு நிமிடம் உள்ள இந்த ட்ரெய்லரில் ஒரு பெண் அடுப்பங்கரையில் படும் கஷ்டத்தையும் அவர் தனது கனவை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதையும் அழகாக காண்பிக்கப்பட்டுள்ளது
ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு ஜெர்ரி வின்செண்ட் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது