திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 ஜனவரி 2020 (16:54 IST)

மூடர்கூடம் நவீன் vs திரௌபதி மோகன் – டிவிட்டரில் காரசார விவாதம் !

திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி க்கும் மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீனுக்கும் டிவிட்டரில் காரசாரமான கருத்து மோதல் எழுந்துள்ளது.

சமீபத்தில் திரௌபதி என்ற படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அதற்குக் காரணம் அந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள நாடகக் காதல் எனும் அம்சம். இது சம்மந்தமாக அந்த படம் சாதி வெறியைத் தூண்டுவதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்க, குறிப்பிட்ட இடைநிலை சாதிகள் அந்த படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி தங்கள் கருத்து என்ன என இயக்குனர் நவீனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப ‘குப்பைகளைப் பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கிறது?’ என அவர் பதிலளித்தார். இதைக் குறிப்பிட்ட இயக்குனர் மோகன் ‘அவர் அவர் எண்ணம் போல அவர் அவர் கருத்து அமையும்.. "எண்ணம் போல வாழ்க்கை".. பல காவியங்கள் படைத்திட வாழ்த்துக்கள் டோலர்...’ என நக்கலாக பதிலளித்துள்ளார்.

இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களால் திரௌபதி படத்துக்கு இலவச விளம்பரம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.