வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (11:01 IST)

கடல் கடந்து வந்த அட்வைசால் கடுப்பான திருமா...

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நமல் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். 
 
இலங்கையில் கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக பதவியேற்றிருப்பதற்கு அச்சம் தெரிவித்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தங்களது கருத்தை வெளிப்படுத்தினர். ஒரு நாட்டின் அதிபரை அந்நாட்டு மக்கள் வாக்களித்து தேர்வு செய்திருக்கும் நிலையில் இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு அரசியல் தலைவர்கள் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது சரியா? என்ற நிலையில் இதுகுறித்து தனது வருத்தத்தை ஒரு அறிக்கை மூலம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
 
அதில், தமிழகத்தின்‌ சில தமிழ்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ இலங்கைத்‌ தமிழ்‌ மக்களை பற்றி ஒருபோதும்‌ ஆழமாக சிந்தித்ததும்‌ இல்லை, அவர்களின்‌ அடிப்படைத்‌ தேவைகள்‌ பூர்த்தி செய்யும்‌ வகையில்‌ எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும்‌ சந்தர்ப்பவாத அரசியல்‌ தேவைகளிற்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவதுதான்‌ மிகுந்த வேதனை தரும்‌ உண்மை.
தமிழகத்தில்‌ தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில்‌ தமிழ்‌ மக்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாகக்‌ காட்டி முதலைக்‌ கண்ணீர்‌வடிக்கும்‌ மதிமுக-வின்‌ பொதுச்‌ செயலாளர்‌ வைகோ, விடுதலை சிறுத்தைகள்‌ கட்சியின்‌ தலைவர்‌ தொல்‌ திருமாவளவன்‌, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழர்‌ தேசிய முன்னனி தலைவர்‌ பழ.நெடுமாறன்‌ ஆகியோரின்‌ அறிக்கைகளை கண்ணுற்றேன்‌. அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத்‌ தவிர அவற்றில்‌ வேறேதும்‌ இல்லை என தெரிவித்திருந்தார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமாவளவன் கூறியதாவது, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற களிப்பில் மகிந்தா ராகபக்ச மகன் நமல் இவ்வாறு அறிக்கிஅ வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியாக நாஜபக்சே கட்சி மற்றும் அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு அவர்கள் அறிவுரை கூற வேண்டாம், நான் ஏற்கனவே இலங்கை சென்றபோது மகிந்த ராஜபக்சவுடன் தமிழர்களின் உரிமைகளுக்காக பேசி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.