செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (07:45 IST)

திரௌபதி படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடத் திட்டமா? பரபரப்பு தகவல்

சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. ஒரு பிரிவினர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
 
அதேபோல் இன்னொரு பிரிவினர் இந்த படத்தை கொண்டாடியும் வருவதால் சமூக வலைதளங்களில் இந்த படம் விவாதப் பொருளாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்க கூடாது என்றும் சென்சார் அதிகாரிகளுக்கு கடிதங்கள் குவிந்துள்ளதாகவும், இதனால் சென்சார் அதிகாரிகளுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த படம் ஒருவேளை சென்சார் அதிகாரிகளால் தடை செய்யப்பட்டால், ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல படக்குழுவினர் தயாராக இல்லை என்றும் சென்சார் சான்றிதழ் கிடைக்காவிட்டால் அல்லது படத்தின் முக்கிய காட்சிகளை சென்சார் அதிகாரிகள் கட் செய்தால் இந்த படத்தை நேரடியாக டிஜிட்டல் சேனலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே தெரிய வரும்