1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (13:01 IST)

வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே... பிக்பாஸ் ஸ்பெஷல் என்ட்ரீ... கஸ்தூரி டிவிட்!

"பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி" ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க  வாக்கு பலிச்சிருச்சே என நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களையும் நேற்று கமல் ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.  
 
பாத்திமா பாபு, இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியா, நடிகை சாக்சி அகர்வால், நடிகை மதுமிதா, நடிகர் கவின், நடிகர் சரவணன், நடிகை அபிராமி வெங்கடாச்சலம், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் மற்றும் நடிகர் சேரன், நடிகை ஷெரின், நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, இலங்கை மாடல் தர்ஷன், நடன இயக்குனர் சாண்டி, மலேசிய மாடல் முகன் ராவ் மற்றும் நடிகை ரேஷ்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள போகிறார் என செய்திகள் பல வெளியான நிலையில் அது பொய்யாகி போனது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி ”பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி" ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க  வாக்கு பலிச்சிருச்சே என குறிப்பிட்டுள்ளார். 
அதாவது இந்த டிவிட்டிற்கான காரணம், பிக்பாஸ் வீட்டில் வரையப்பட்டு ஓவியம் ஒன்று கஸ்தூரியை போல் இருப்பதாக ரசிகை ஒருவர் கூறியதால், அட, ஓவியமாவே  வரைஞ்சுட்டாங்களா? எப்படியோ, "பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி" ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க  வாக்கு பலிச்சிருச்சே! என பதிவிட்டுள்ளார். 
 
மேலும், சிலர் நீங்கள் ஏன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என கேட்டதற்கு ரெண்டு குட்டி காரணங்கள் - ஒரு குட்டிக்கு 12 வயசு, இன்னொரு குட்டிக்கு 7 வயசு! பதிவிட்டுள்ளார். மேலும், சிலர் ஸ்பெஷல் என்ட்ரியை எதிர்பார்க்கலாமா? என கேட்டு வருகின்றனர்.