1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth.K
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (13:09 IST)

சூப்பர் ஸ்டார்னு போடாதீங்க.. ரஜினியின் திடீர் முடிவு? – ஜெயிலர் பாடலாசிரியர் தகவல்!

ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரஜினிகாந்த் பாடல் வரிகளில் ஏற்படுத்திய மாற்றம் குறித்து அப்படத்தின் பாடலாசிரியர் கூறியுள்ளார்.



ரஜினிகாந்த் நடித்து நெல்சன் இயக்கி இன்று வெளியாகியுள்ள படம் ஜெயிலர். பல எதிர்பார்ப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் நடுவே வெளியான இந்த படம் முதல் ஷோவிலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வார இறுதி நாட்கள் வரை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதங்கள் நடந்து வரும் நிலையில் ரஜினியே என்றும் சூப்பர் ஸ்டார் என்று ஜெயிலர் படம் நிரூபித்திருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடந்த சுவார்ஸ்யமான சம்பவம் குறித்து டைகர் கா ஹூக்கும் பாடலை எழுதிய சூப்பர் சுப்பு கூறியுள்ளார். அதில் “தலைவர் நிரந்தர சூப்பர் ஸ்டார்” என்ற வரிகளை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். ஆனால் அதற்கு ரஜினி “சூப்பர் ஸ்டார் பிரச்சினையெல்லாம் வேண்டாம். அந்த வரிகளை எடுத்து விடுங்கள்” என்று கூறியுள்ளார். அதனால் அந்த வரிகளை “தலைவர் களத்துல சூப்பர் ஸ்டார்” என்று மாற்றியதாக சூப்பர் சுப்பு தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டிகள் இருந்து வரும் நிலையில் “நிரந்தர சூப்பர் ஸ்டார்” என்ற வரிகளை ரஜினிகாந்த் நீக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K