திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth.K
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (10:37 IST)

”அவர் முத்துவேல் பாண்டியன் இல்ல… அலெக்ஸ் பாண்டியன்!” – எப்படி இருக்கு ஜெயிலர்?

Jailer
இன்று ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் கொண்டாட்டங்களும், விமர்சனங்களும் களைகட்டி வருகின்றன.



ரஜினி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, அதேசமயம் மிகவும் பயத்தோடு எல்லாரும் அணுகிய படம் ஜெயிலர். காரணம் முன்னதாக இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தில் கொடுத்த சம்பவம்.

Jailer


ஆனால் அதையெல்லாம் மறக்கும் அளவிற்கு ஜெயிலர் படத்தை தரமான மாஸ் சம்பவமாக மாற்றியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Jailer


ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனாக வரும் ரஜினிகாந்த் அவர் நடித்த மூன்று முகம் படத்தில் வரும் சூப்பர் போலீஸான அலெக்ஸ் பாண்டியனை நினைவுப்படுத்துவதாக பலர் தெரிவித்துள்ளனர்.

முதல் பாதி சாதாரண குடும்ப தலைவர், சின்ன சின்ன காமெடிகள் என நகரும் கதை கூஸ்பம்ப்ஸ் இண்டெர்வெல்க்கு பிறகு அதிரடி மாஸ் எண்டெர்டெயினராக மாறியிருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

Jailer


ஜெயிலர் படம் மொத்தத்தில் எப்போதுமே ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி மட்டும்தான் என மீண்டும் நிரூபித்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Edit by Prasanth.k