1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (14:10 IST)

பார்த்திபன் கிட்ட மோத வேணாம்… இந்த பெரிய படம் எல்லாம் ப்ளாப் ஆகக் காரணம் பார்த்திபன்தானா?

வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்கிறார். படத்தில் ஒரு கேமியோ ரோலில் தானும் நடித்துள்ளார். படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இந்தியன் 2 என்ற பிரம்மாண்ட படத்துக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கு அதிகளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் பார்த்திபனின் டீன்ஸ் படத்துக்கு சிறிய அளவில் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் பார்த்திபனின் படத்தோடு ரிலீஸான பெரிய படங்கள் சில ப்ளாப் ஆகியுள்ளன. அது சம்மந்தமான மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

2015 ஆம் ஆண்டு அஞ்சான் படத்தோடு கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெளியானது. அதில் அஞ்சான் படம் ப்ளாப் ஆனது. அதே போல அவரின் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தோடு வெளியான விஜய்யின் பைரவா படமும் ப்ளாப். இப்போது டீன்ஸ் படத்தோடு வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அதனால் பார்த்திபன் படத்தோடு பெரிய படங்களை ரிலீஸ் செய்யவேண்டாம் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.