1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (07:58 IST)

தென்னிந்திய நடிகர்கள் யாரும் போதை பொருள் விளம்பரங்களில் நடிப்பதில்லை- சித்தார்த் பெருமிதம்!

கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனை விட அதிக நேரம் வரும் விதமாக சித்தார்த்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாகத்தின் இரண்டாம் பாதியில் தான் இந்தியன் தாத்தா வருவாராம். அதனால் படக்குழுவுடன் இணைந்து சித்தார்த்தும் பல இடங்களில் நேர்காணல் கொடுத்து படத்துக்கு ப்ரமோஷன் செய்து வருகிறார்.

இந்த வகையில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “தென்னிந்திய நடிகர்கள் யாரும் போதைப் பொருள் விளம்பரங்களில் நடிப்பதில்லை. அதற்கு காரணம் ரஜினி மற்றும் கமல் ஆகிய ஜாம்பவான்கள்தான். அவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே போதை பொருள் சம்மந்தமான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தனர். அவர்கள் ஒருவேளை நடித்திருந்தால் மற்ற நடிகர்களும் அதில் நடித்திருக்கலாம். எங்கள் துறையில் இதுபோன்ற ஆளுமைகள் இருப்பது எங்களுக்குப் பெருமை” எனக் கூறியுள்ளார்.