1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (19:19 IST)

ரிலிஸுக்கு முன்பே 12 கோடி லாபம் பார்த்த டாக்டர் தயாரிப்பாளர்!

டாக்டர் படம் கிட்டத்தட்ட 57 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில் இப்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இப்போது அக்டோபர் 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில் ஆயுத பூஜை விடுமுறை வருவதாலும், போட்டிக்கு எந்த படங்களும் இல்லாததாலும் அனைத்து ஏரியாக்களிலும் படம் மிகப்பெரிய தொகைக்கு விலைபோயுள்ளதாம்.

இதுவரை கிட்டத்தட்ட 57 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை மட்டுமே சுமார் 12 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் என சொல்லப்படுகிறது. ஆனால் படத்தை விநியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விநியோகம் செய்துள்ளதால் ரிலீஸுக்கு பின்னரே முழுமையான லாப நஷ்ட கணக்கு தெரியவரும் என சொல்லப்படுகிறது.