வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (13:36 IST)

ஹன்சிகா தன்னுடைய 50வது படத்தின் அறிவிப்பை கைவிட்டது ஏன் தெரியுமா...?

நடிகை ஹன்சிகா தன்னுடைய 50வது படத்தின் அறிவிப்பை பிறந்தநாளன்று (ஆக்ஸ்ட் 9ஆம் தேதி) அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது இந்த தன்னுடைய ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாதாம். இதனை அவரே டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா என நடித்து வருபவர் ஹன்சிகா. கடைசியாக பிரபுதேவாவுடன் குலேபகாவலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது, பி ஹேப்பி பிந்தாஸ் என்ற கன்னட திரைப்படமும், மாப்பிள்ளை திரைப்பட மொழிமாற்று இந்தி படமான ஜமாய் ராஜாவும் வெளியாக இருக்கின்றன.
இந்த நிலையில் அவருடைய 50வது படத்தின் தலைப்பை தனுஷ் இன்று ஹன்சிகா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட இருப்பதாக இருந்தது. ஆனால் மறைந்த  கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஹன்சிகா பட தகவல் வெளியாகாதாம். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.