ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (16:27 IST)

சிரஞ்சீவி உடன் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரியுதா?

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகர் மற்றும் அரசியல்வாதி  என அக்கட தேசத்தில் ஆளுமைபடைத்த நபராக இருந்து வருகிறார். 1978-ம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்த இவர் இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
 
தற்போது தெலுங்கு சினிமாவின் மேகா ஸ்டார் என போற்றப்படும் இவர் பல்வேறு விருத்திகளை வாங்கியுள்ளார். இவரது மகன் ராம் சரண் தற்போதைய பிஸியான இளம் நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் சிரீஞ்சீவியுடன் இருக்கும் பிரபல தமிழ் நடிகரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது வேறு யாருமில்லை, நடன கலைஞரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அதான். அவர் வளர்ந்து வந்த சமயத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.