ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (11:53 IST)

கோடிக்கணக்கான ரசிகர்களின் கரகோஷத்தால் மிரண்டுபோன சமந்தா - வீடியோ!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். 
 
அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் பின்னர் பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
 
சகுந்தலம் படம் 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.  இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார் சமந்தா. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் சமந்தா பவுன்சர்கள் அணிவருப்புருடன் மேடைக்கு வர அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கரகோஷமிட்டு அவரை திகைப்பில் ஆழ்த்தினார்கள். இதோ அந்த வீடியோ: