வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 23 மார்ச் 2018 (22:15 IST)

‘பிக் பாஸ்’ சீஸன் 2 எப்போது தொடங்குகிறது தெரியுமா?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் எப்போது தொடங்கப் போகிறது என்ற விவரம் கிடைத்துள்ளது. 
கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் டாஸ்க். ஆரவ், ஓவியா, பிந்து மாதவி, ஜூலி, காயத்ரி ரகுராம், சக்தி உள்பட மொத்தம் 19 பேர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக்  கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆரவ் வெற்றி பெற்றார்.
 
இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. எனவே, இரண்டாவது சீஸன் எப்போது தொடங்கும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நமக்கு கிடைத்த தகவல்படி ஜூன் 22ஆம் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்கும் என இப்போது திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார்.