1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (12:42 IST)

ஹீரோயினாக பிக்பாஸ் ஜூலி நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஹீரோயினாகியுள்ளதை ஜூலி  ஏற்கனவே ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக   அறிமுகமானார். அண்மையில் அப்பளம் விளம்பர படம் ஒன்றில் நடித்தார். இந்நிலையில் தற்போது முதல்முறையாக   கதாநாயகியாகவும் நடிக்கிறார்.
 
இந்நிலையில் தான் நாயகியாக நடிக்கிறேன் என்ற தகவலை மட்டும் வெளியிட்ட ஜுலி அடுத்த எப்படிபட்ட படம், நாயகன் யார் என்ற எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. அதேநேரத்தில் ஜுலி நடிக்கும் புதிய படத்திற்கு படக்குழு உத்தமி என்று  பெயரிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இவை பொங்கலுக்கு அதிகாரப்பூர்வமாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, புகைப்படத்தில் ஜுலியுடன் இருப்பவர் தான்  நெகட்டிவ் ரோலில் நடிக்கின்றாராம்.