1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 அக்டோபர் 2018 (20:29 IST)

எனக்கு மட்டும் ஒரே மாதிரி கதை வரக் கூடாதா...? முருகாஸ் பேட்டி

தற்போது தமிழ்நாடில் இரண்டு விஷயங்கள் குறித்து முக்கியமாக அனைவரும் விவாதித்துவருகின்றனர்.அதில் முதலாவது: 18 எம்.எல்.ஏக்கள் மீதான நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு; இன்னொன்று தமிழ்சினிமாவில் படம் ரிலீசாவதற்கு முன் வழக்கமாக வரும் பிரச்சனையாக இப்போதும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வருண் தொடர்ந்துள்ள சர்கார் கதைதிருட்டு சம்பந்தமான வழக்கு.இதில் முக்கியமாக முருகதாஸின் ஒவ்வொரு படத்தின் போது இம்மாதிரி குற்றச்சடுகள் வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்தக் குற்றசாட்டு குறித்து ஒரு தனியார் யூடூப் சேனலுக்கு இயக்குநர் முருகதாஸ் பேட்டியளித்துள்ளார்.
 
அதில் முருகதாஸ் கூறியதாவது:
 
நியாயமாக உழைத்திருக்கிறேன்.ஆனால் அதற்கான பிரதிபலன் கிடைக்காமல் தொடர்ச்சியாக என்மீது குறைகூறப்படுகிறது.
 
இயக்குநர் பாக்யராஜ் எடுத்த சின்ன வீடு படத்தின் கதை கூட என் குருநாதர்  கலைமணி எடுத்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் சாயலாக தெரிகிறது.பாக்யராஜ்க்கு மட்டும் ஒரே மதிரி சிந்தனைகள் வரலாம் .எனக்கு வரகூடாதா...?இதற்கு இயக்குநர் பாக்யராஜ் என்ன விளக்கம் தரப்போகிறார் என கேள்வி எழுபியுள்ளார்.
 
மேலும் என கதையை கே.பாக்யராஜ் படிக்கவில்லை: ஏனென்றால் எனது பவுண்டெட் ஸ்கிரிப்டை  கூட பிரித்து படித்திருக்க வேண்டும் ஆனால் அடுமட்டுமில்லாமல். என் படத்தையும் யாரும் பார்க்கை வில்லை; இப்படியிருக்க எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை அளித்து எவ்வளவு தவறு செய்திருக்கிறார்கள்.
 
இதை நான் எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறேன் என்றால் நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டிய பவுண்டேட் ஸ்கிரிப்ட் என்னிடம் தான் உள்ளது.
 
விஜய்க்கு எதிரியாக உள்ளவர்களாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாலும் இந்த சிக்கல் எழுந்துள்ளது.இவ்வாறு அவர் மிக்க வருத்தத்துடன் கூறியுள்ளார்.
 
இதையும் அவர்கள் படித்துப் பார்க்காமல் என்மீது ஒருதலை பட்சமாக முடிவு எடுத்துள்ளனர்.இதில் முக்கியமாக வருண் என்பவரை நன் பார்த்ததே கிடையாது என தன்னிலை விளக்க கொடுத்துள்ளார் முருகதாஸ். இந்த கதை சம்பந்தமான விவகாரம் குறித்து என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை எல்லோருமே அறிய ஆவலுடன் உள்ளனர்.