வெளியாகும் உண்மைகள்: அமலாபால் விவாகரத்துக்கு காரணம்??
நடிகை அமலா பால் தனது காதல் கணவரான இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருமண வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்காததால் விஜய்யை பிரிந்ததாக நடிகை அமலா பால் கூறியுள்ளார். விஜய்யை பிரிந்தது நன்மைக்கே என்று நினைக்கிறேன்.
சந்தோஷம் இல்லாத திருமண பந்தத்தில் தொடர்ந்து நீடிப்பதில் பலனில்லை. சந்தோஷம் இல்லையா அந்த பந்தத்தில் இருந்து வெளியேற யோசிக்கக் கூடாது. எனக்கு விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும் என கூறியுள்ளார்.
விவாகரத்தால் எனக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டாலும் அதில் இருந்து என் குடும்பத்தார் என்னை மீட்டுவிட்டனர். விவாகரத்தால் எனக்கு பட வாய்ப்புகள் வராமல் இல்லை.
நான் 7 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்கிறேன். நான் மாடர்ன் உடை அணிவது பற்றி விமர்சிப்பவர்களை நான் கண்டுகொள்வது இல்லை என தெரிவித்துள்ளார்.