திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (13:58 IST)

தமிழ் பேசும் இந்தியன்’ டிசர்ட் உடன் வெற்றிமாறன்: வைரலாகும் புகைப்படம்!

தமிழ் பேசும் இந்தியன்’ டிசர்ட் உடன் வெற்றிமாறன்:
ஒரு பக்கம் கொரோனா வைரஸ், இன்னொரு பக்கம் கொரனோவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி என நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் சில மார்க்கெட் இல்லாத திரை நட்சத்திரங்கள் திடீரென ’ஐஎம் எ தமிழ் பேசும் இந்தியன்’ மற்றும் ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற டீ ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்
 
இவ்வாறு டி ஷர்ட்டை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினால் இந்தி அழிந்துவிடுமா? அல்லது தமிழ் வளர்ந்துவிடுமா? என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷிரிஷ் ஆகிய இருவர்  சமூக வலைதளங்களில் பற்ற வைத்த இந்த நெருப்பு இரண்டு நாட்களாக பற்றிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது திடீரென தனது மகனுடன் ’ஐ அம் இன் தமிழ் பேசும் இந்தியன்’ என்ற டீசர்ட் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் இதனை மீண்டும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தமிழை வளர்ப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல் வெறும் டீ சர்ட் அணிந்து திரை நட்சத்திரங்கள் விளம்பரத்திற்காக பதிவு செய்து வருவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்