செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:52 IST)

தலைவி படத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்குவதில் சிக்கல் – இயக்குனர் எடுத்த முடிவு!

கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் சில காட்சிகளை கிராபிக்ஸ் மூலமாக எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இதில் சில காட்சிகளை ஹைதராபாத்தில் படம்பிடித்துள்ளது படக்குழு. அந்த காட்சிகள் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசுவது போன்ற காட்சிகளாம். இன்னும் ஜெயலலிதா கலந்துகொண்ட பேரணிக் காட்சிகள் படமாக்கப்பட வேண்டுமாம். ஆனால் இப்போது கொரொனா காரணமாக படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நபர்களே அனுமதிக்கப்படுவதால் அந்த காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் எடுக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் விஜய்.