வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 மே 2021 (08:03 IST)

பன்முகக் கலைஞர் கங்கை அமரனின் மனைவி காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கங்கை அமரனின் மனைவி இயற்கை எய்தியுள்ளார்.

இயக்குனர் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை நேற்று இரவு 11.30 மணிக்கு உடல்நல பிரச்சனைகள் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இளையராஜாவின் தம்பியும் தமிழ் திரையில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக விளங்கிய கங்கை அமரன் மணிமேகலை தம்பதிகளுக்கு வெங்கட்பிரபு(இயக்குனர் மற்றும் நடிகர்), பிரேம்ஜி அமரன் (நடிகர் மற்றும் இசையமைப்பாளர்) என்று இரண்டு மகன்கள் உள்ளன. சமீபகாலமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த மணிமேகலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 69.