1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:58 IST)

கடை ஊழியர்களுக்கு இருக்கை: தமிழ் திரைப்பட இயக்குனர் பாராட்டு

கடை ஊழியர்களுக்கு இருக்கை: தமிழ் திரைப்பட இயக்குனர் பாராட்டு
சட்டசபையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ஊழியர்களுக்கு இருக்கை அமைக்க வேண்டும் என்று சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது என்பதும் செப்டம்பர் 13-ஆம் தேதி இந்த சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் திட்டகுடி கணேசன் அவர்கள் தெரிவித்திருந்தார் 
 
இந்த அறிவிப்புக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தமிழக அரசுக்கு இது குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்
 
தன்னுடைய அங்காடித்தெரு திரைப்படத்தில் இது குறித்த பிரச்சினையை காட்சிகள் மூலம் கூறியிருப்பதாகவும் நின்றுகொண்டே நீண்ட நேரம் பணி செய்யும் ஊழியர்களுக்கு வெரிகோஸ் என்ற நோய் வர வாய்ப்பு இருப்பதை கூறி இருந்ததாகவும் அதனை புரிந்து கொண்டு தமிழக அரசு தற்போது இது குறித்து சட்ட முன்வடிவை கொண்டு உள்ளதற்கு மிகவும் நன்றி என்றும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது