வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (07:47 IST)

வசந்தபாலன் இயக்கும் அரசியல் வெப் சீரிஸ் ‘தலைமைச் செயலகம்’ – கவனம் ஈர்த்த டீசர்!

இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி இருந்தார். அந்த படத்துக்குப் பிறகு இப்போது அவர் தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரை ஜி 5 ஓடிடிக்காக இயக்கியுள்ளார். இதில் பரத், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அரசியல் தொடரான இதன் டீசரில் ஒரு அரசியல் வாதியின் பார்வையில் இருந்து ஒரு பிரச்சனை குறித்து பேசப்பட்டு அதற்கான காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்த தொடர் மே 17 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.