வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: திங்கள், 22 மே 2017 (16:16 IST)

ரஜினிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?: கொந்தளிக்கும் இயக்குநர்!

ரஜினிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?: கொந்தளிக்கும் இயக்குநர்!

9 வருடங்களுக்கு பின்னர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து தான் அதிகமாக பேசினார். நான் அரசியலுக்கு வரமாட்டேன் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் என தனது அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.


 
 
அரசையும், அரசியல்வாதிகளையும் பொதுவாக விமர்சித்து குற்றம்சாட்டிய ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிக்கும் தமிழர்களை கீழ்த்தரமானவர்கள் என கூறினார். ரஜினியின் இந்த கருத்து பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் பச்சை என்கிற காத்து, மெர்லின் ஆகிய திரைப்படங்களை இயக்கிய தமிழ்மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல்கொடுத்து வரும் இயக்குநர் வ.கீரா தமிழ் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரஜினியை கடுமையாக சாடியுள்ளார்.
 
அதில், சமூகவலைத்தளங்களில் சிலர் விமர்சித்ததற்காக தமிழர்கள் கீழ்தரமானவர்கள் என்று கூறுகிறார் ரஜினி. அப்படி கூறுவதற்கு ரஜினிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? விமர்சனம் செய்தால் கீழ்தரமானவர்களா? விமர்சனத்தை உள்வாங்க தெரியாத ரஜினி எப்படி அரசியல்வாதியாக முடியும்?.
 
ரஜினி உணர்ச்சிவசப்படக்கூடிய சாதாரண மனிதன். அவரால் தொடர்ந்து 10 நிமிடம் கூட தெளிவாக பேச முடியாது பதட்டப்படுவார். இந்த மண்ணை மக்களை உண்மையாக நேசிக்கும் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் இதுவே எங்கள் நிலைப்பாடு என இயக்குநர் வ.கீரா கூறியுள்ளார்.