வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (09:49 IST)

ஆமா, நான் லவ் பண்ணுவேன், என்னை கேட்க நீங்க யாரு? அபிராமியின் ஆத்திரம்

பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே கவினை காதலித்த அபிராமி, அந்த காதல் ஈடேறாமல் போனதால் கடந்த சில நாட்களாகவே கவினை பழிவாங்க அபிராமி காத்திருந்தது போல் அவருடைய செயல்கள் தெரிந்தது. கவினை பழிவாங்க அபிராமி எடுத்த முதல் திட்டம் கவின் முன்னாடியே முகினை காதலிப்பது போல் நடிப்பது. இதில் முகினுக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளாமல் அவருடன் நெருக்கமாக பழகுகிறார் அபிராமி
 
இதுகுறித்து ஜாடைமாடையாக மற்ற போட்டியாளர்கள் பேச, ஒரு கட்டத்தில் அபிராமி பொங்கி எழுந்ததுதான் இன்றைய முதல் புரமோ வீடியோவில் வந்துள்ளது. இன்றைய புரமோவில் அபிராமி கூறியதாவது:
 
இதுகுறித்து யாருக்கும்  நான் எக்ஸ்பிளைன் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. முகின் எனது நண்பன். இதில் யாருக்காவது பிராப்ளம் என்றால் அதை உங்களோட வச்சுக்கோங்க. நான் ஒருவேளை அவனை லவ் பண்ணினால் லவ் பண்றேன்னு மூஞ்சியை பார்த்து சொல்வேன். எங்களுக்குள்ள பிரச்சனை வந்தா நாங்க பார்த்துக்கிறோம். இதை சால்வ் பண்றோம்ன்னு யாரும் வரவேண்டாம். எவனுக்காவது ஏதாவது பிரச்சனை இருந்தால் கண்ணை மூடிக்கோங்க' என்று ஆத்திரமாக கூறி சென்றுவிட்டார். 
 
அப்போது ஒருகுரல் 'உன்னைத்தாம்பா சொல்றா' என்று கவினை நோக்கி கூறுகின்றது. அபிராமியின் இந்த ஆத்திரமான பேச்சு கவினை மிகவும் அப்செட் ஆக்கியிருப்பதாக தெரிகிறது