வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (10:28 IST)

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய தலைமுறை வாழ்வை சொல்லும் காதல் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி" !!

சிட்டி லைட் பிக்ஸர்ஸ்  தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி'
 
இப்படத்தின் படப்பிடிப்பு  நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள  பூஜையுடன்  துவங்கியது. 
 
தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார். 
 
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது
 
கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும் சென்னையில் படக்குழு திட்டமிட்டுள்ளது. 
 
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
 
சிட்டி லைட் பிக்ஸர்ஸ்  சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார். 
 
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். 
 
இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கப்பட உள்ளனர்.