செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (17:47 IST)

இயக்குனர் ராம் இயக்கத்தில் நயன்தாரா? பின்னணியில் விக்னேஷ் சிவன்!

நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராம் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலில் சக்கை போடு போட்டாலும் அவருக்கு பெரிய அளவில் விருதுகள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த குறையைப் போக்கும் விதமாக இயக்குனர் ராம் இயக்கத்தில் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளாராம்.

இந்த கூட்டணி இணைவதற்கு நயன்தாராவின் காதலரும் ராமின் நெருங்கிய நண்பருமான விக்னேஷ் சிவன்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.