1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:32 IST)

சிம்புவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர் யார்?

சிம்புவின் 50வது படத்தை பிரபல இயக்குனர் ஒருவரை இயக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 சிம்புவின் 47வது படம் மாநாடு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவருடைய 48வது படமாக பத்து தலை திரைப்படமும் 49வது திரைப்படமாக ‘கொரோனா குமார்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது
 
இந்த நிலையில் சிம்புவின் 50வது திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு இளைஞன் உலகம் முழுவதும் சுற்றுவதால் ஏற்படும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளும் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது
 
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது