திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (11:17 IST)

சமந்தாவின் இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் ஒன்றுதான் காரணம் –இயக்குனர் பாராட்டு!

நடிகை சமந்தா மற்றும் அதர்வா நடித்த பாணா காத்தாடி திரைப்படம் 10 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு அதர்வா மற்றும் சமந்தா ஆகியவர்களின் நடிப்பில் வெளியான பாணா காத்தாடி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், யுவனின் இசைக்காகவும், அதர்வா மற்றும் சமந்தாவின் நடிப்புக்காகவும் இன்று வரை நினைவுகூறப்பட்டு வருகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலில் சமந்தாவின் வளர்ச்சி குறித்து பேசியுள்ளார். அதில் ‘சமந்தாவுக்கு சினிமா மேல் வெறி அதிகம். எனக்கு தெரிந்தவரை எந்தவொரு பொண்ணுக்கும் சினிமா மேல இவ்ளோ வெறி இருந்து பார்த்ததில்லை. ரிலிஸாகும் எந்த படமா  இருந்தாலும் முதல் நாளே தியேட்டருக்குப் போய் பார்த்திடுவாங்க. சினிமாவை அப்படிக் காதலிப்பாங்க.அதனாலதான் இந்தளவுக்கு பெரிய இடத்துக்கு முன்னேறி இருக்காங்கனு நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.