செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (18:11 IST)

ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி நடக்கும் நட்சத்திர கல்யாணம் – கலந்துகொள்வாரா விஜய்?

நடிகர் விஜய்யின் மாமாவான சேவியர் பிரிட்டோவின் மகளுக்கும் முரளியின் இளைய மகன் அதர்வாவுக்கும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. 

மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து வளரும் நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார்.

அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அவரது தம்பி ஆகாஷ் நடிகர் விஜய்யின் மாமாவும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகளை காதலித்து வந்தார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதையடுத்து இப்போது இம்மாதம் 23 ஆம் தேதி சாந்தோம் சர்ச்சில் மிக எளிமையான முறையில் அவர்களின் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணத்தில் விஜய் தன் குடும்பத்தோடு கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.