1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (17:43 IST)

இயக்குனர் ராஜேஷிடம் மன்னிப்புக் கேட்ட மிஷ்கின்!

இயக்குனர் மிஷ்கின் கலகத்தலைவன் ஆடியோ ரிலீஸ் விழாவில் இயக்குனர் ராஜேஷைப் பற்றி அவதூறு செய்யும் விதமாக பேசினார்.

கடந்த மாதம் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத் தலைவன் படத்தின் ஆடியோ மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின் “இயக்குனர் மகிழ் திருமேனியின் ஒரு படத்தைக் கூட நான் பார்க்கவில்லை. ஆனால் அவரின் எல்லா படங்களையும் விட அவர் மேன்மையானவர். மேலும் இயக்குனர் ராஜேஷை பற்றி குறிப்பிடும் போது அவரை ஒரு குட்டிச்சுவராய் போன இயக்குனர்” என்று பேசினார்.

இது மேடையில் அமர்ந்திருந்தவர்கள் மற்றும் விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு அசௌகர்யத்தை உருவாக்கியது. இந்நிலையில் தொடர்ந்து மேடைகளில் இது போல அநாகரிகமாக பேசி வரும் இயக்குனர் மிஷ்கின் ‘இயக்குனர் ராஜேஷிடம்’ மன்னிப்புக் கேட்க வேண்டும் என உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கை பற்றி கேள்விபட்ட மிஷ்கின் உடனடியாக ராஜேஷுக்கு போன் செய்து வருத்தத்தை தெரிவித்து சமாதானம் பேசி பிரச்சனையை சுமூகமாக முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.