தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களுக்கு புகழ் அஞ்சலி
தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களுக்கு இன்று புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூர் பரணிபார்க் மற்றும் பரணி வித்யாலயா பள்ளி குழுமங்கள் சார்பில், சங்க இலக்கியங்களை மீட்டெடுத்த எங்கள் தமிழ் தாத்தாவிற்கு அவரது நினைவு நாளில், "தமிழி" எழுத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களின் கையெழுத்து பிரதிகளை படையல் இட்டு , பெயரன் பெயர்த்திகளின் புகழ் அஞ்சலி செலுத்தினர்.
இவ்வுலகம் இருக்கும் வரை சங்க இலக்கியங்களின் பெருமையும் தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களின் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பரணிபார்க் கல்விக் குழுமங்களில் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.